பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஏழாவது வாரத்தை கடந்து விட்டது. ஆரம்பத்தில் மந்தமாக சென்ற இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்த வாரம் தலைவராக இருந்த ஷாரிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாரிக் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக போட்டியாளர்கள் குறித்தும் சில சுவாரசியமான தகலவை கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் மிகவும் போலியாக உள்ளது யாரென்றே கேள்விக்கு சென்ராயன் என்று பட்டென்று பதிலளித்தார் ஷாரிக்.
அதற்கான விளக்கத்தை கூறிய ஷாரிக், சென்றாயன் தான் பிக் பாஸ் வீட்டில் பொய்யாக இருக்கிறார் என்றும் அவர் எப்போதும் தன்னை வெகுளி என்று காட்டிக்கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்,. அதே போல டேனியை பற்றி குறிப்பிடுகையில் ”டேனி ஒரு ஜாலியான மனிதர், அவர் வீட்டில் எப்போதும் அனைவரிடமும் ஜாலியாக பேசுவார். ஆனால், அவர் எப்போதும் வீட்டில் சத்தம் போட்டு பேசுவதால் அவரது குரல் தான் மற்ற போட்டியாளர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போய்விடுகிறது என்று கூறியுள்ளார்.
அதே போல பொண்ணம்பலம் கொஞ்சம் உசாராக விளையாடுகிறார். அவர் வாரத்தில் 5 நாட்கள் வேறு மாதிரி இருப்பார். ஆனால், வார இறுதியில் கமல் சாறை சந்திக்கும் போது மட்டும் அவர் வேறு மாதிரி நடந்து கொள்வார். அவரை புரிந்துகொள்ள முடியாது.’ என்று தெரிவித்துள்ளார்.