இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா.! இறுதியாக தனது புகைப்படத்தை அனுப்பிய பிக் பாஸ்.!

0
27874
bigg-boss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு குரலாக இருந்து வருகிறது. “பிக் பாஸ் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்” என்ற Promo-வில் கம்பீரமான குரலுக்கு பின்னால் இருக்கும் அவரது முகத்தை இதுவரை பெரும்பாலானோர் கண்டதில்லை.

-விளம்பரம்-

அந்த பிரம்மாண்ட குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் கோபி நாயர் என்பது மட்டுமே நமக்கு தெரியும். கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்துள்ளார். முதலில் இயக்குனராக வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இவரது குரல் வளத்தை கண்டு டப்பிங் ஆர்டிஸ்டாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : கட்டுக்கோப்பான 25 வயது பெண் தேவை.! சர்ச்சையை ஏற்படுத்தியதால் பதிவை நீக்கிய பார்த்திபன்.!

- Advertisement -

தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவியில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் பேசும் அந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. அது யார் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் லாஸ் லியா விற்கு பிக் பாஸ் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் இருப்பது தான் பிக் பாஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் கூட பிக் பாஸ்ஸின் முகம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தில் பிக் பாஸ் ஒரு இளமையான நபராக தான் தெரிகிறார்.

Advertisement