கட்டுக்கோப்பான 25 வயது பெண் தேவை.! சர்ச்சையை ஏற்படுத்தியதால் பதிவை நீக்கிய பார்த்திபன்.!

0
2698
parthiban
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியும் , வித்தியாசமான முறையிலும் படங்களை கொடுப்பவர் நடிகர் பார்த்திபன்.மேலும்,அவர் தமிழ் சினிமா துறையில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது பார்த்திபன் அவர்கள் “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களையும், மக்களிடையேயும் அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் “ஒன் மேன் ஆர்மி”யாக படம் முழுவதும் ஒரே ஒரு மனிதனாக நடித்துள்ளார். படம் முழுவதும் ஒரே திரில்லர் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களே அடுத்தது என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு கதை போய்க் கொண்டு இருக்கிறது .

-விளம்பரம்-

இந்த படத்தை பயஸ்கோப் நிறுவனத்தின் கீழ் நடிகர் பார்த்திபன் அவர்கள் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பார்த்திபன் எளிமையான, சாதாரண நடுத்தர வாழ்வை வாழ்ந்து கொண்டு வருபவர். இவருடைய மகனுக்கும், மனைவிக்கும் நடக்கும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு போராடுகிறார் என்பதுதான் கதை. மேலும், கொலைகளை செய்து அதிலிருந்து எப்படி? தப்பிக்கிறார் என்பதுதான் கதை. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் பார்த்திபன் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், பார்த்திபன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படம் குறித்து என் மனதில் நிறைய தோன்றுகிறது.

- Advertisement -

அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி தயாராக உள்ளது என்று கூறினார்.அந்த படம் ஃபிட்னஸ் பிரீக்(கட்டுக்கோப்பான) கொண்ட 25 வயது பெண்ணின் கதை. மேலும், அந்தப் பெண் சிரித்தாலே போதும் பசங்களை எல்லாம் சீரியஸ் ஆகி ஐசியூக்கு அனுப்பும் கூடிய அளவு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுபவமுள்ளவர் தேவை என்றும் , கார்த்திக்கை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் போன் நம்பரை பதிவிட்டுள்ளார். இவருடைய ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படமும் வெற்றிகரமாக வெளிவர உள்ளது. இதற்கு, அடுத்த வரிசையில் அடுத்து தன்னுடைய புதிய படத்தையும் பற்றியும் அறிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன் . அதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.இதற்கு ரசிகர் ஒருவர் கூறியது , வித்தியாசமாகவும் நக்கல், கிண்டல், கேலி என்ற பெயரில் பெண்களை வைத்தும் , பாலியல் பண்டமாக பார்க்கும் கதையாக இருக்கிறது. இது பெண்களை இழிவு படுத்துவது போல் உள்ளது என்று கூறியிருந்தார்கள்.

-விளம்பரம்-

எந்த ஒரு பெண்ணும் பிறக்கும் முன்னே பாலியில் துறைக்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். உடனே பார்த்திபன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்ததை டெலீட் செய்தார். அதற்கு அந்த ரசிகர் கூறியது, நீங்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் அவர்களை பற்றி எல்லாம் கூறி இருக்கிறீர்கள். அவர்களின் கருத்துக்களை இன்னும் நீங்கள் கவனமாக வாசிக்கவும். ஏனென்றால், எங்களின் எதிர்ப்புக்கான காரணம் உங்களுக்கு புரியும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு பார்த்திபன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, நான் என்னுடைய பதிவில் ஜாலியாக தான் செய்தேன். யாருக்கும் வேண்டாம் என நீக்கிவிட்டேன் என்று கூறினார்.

அதற்கு கொட்றவை கூறியது , நன்றி தோழரே! உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் செய்த காரியம். மேலும், யாரென்று தெரியாதவர்கள் சொல்லப்படும் கருத்துக்களை பல பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் போவார்கள். ஆனால், நீங்கள் நான் சொல்லியதை கோபப்படாமல் என்னுடைய வார்த்தைக்கு மதிப்பு தந்து உள்ளீர்கள்.நீங்கள் தரையில் கால் பதித்து நிற்கிறீர்கள். எங்களுடைய வாழ்த்துக்கள் என்று அவர்கள் கூறினார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி மக்களிடையே அதிக அன்பை பெற்று வருகிறார் பார்த்திபன்.

Advertisement