முகென், சாண்டியை விடுங்க.! லாஸ்லியா, ஷெரின் எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள் தெரியுமா ?

0
6225
sherin
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் (அக்டோபர் 6) நிறைவடைந்தது. எப்போதும் எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பார்க்கலாம் என்று கமல் கூறியது போலவே இந்த சீசனில் ரசிகர்கள் எதிர்பாரதா பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றது. எனவே, கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசன் படு மும்மரமாக சென்றது என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-
Bigg-Boss-4

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு விதமான மேடு பள்ளங்களை சந்தித்து நான்கு போட்டியாளர்கள் மட்டும் இறுதிப்போட்டியில் நுழைந்தது இருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பலவேறு போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டார்கள் அதில் மிகவும் முக்கியமானவர்கள் தர்ஷன் லாஸ்லியா முகென் ஆகிய மூவர்கள் தான். இதில் தர்ஷன் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு நுழைவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மேலும் இறுதி போட்டியில் தகுதி பெற்றிருந்த சாண்டி, லாஸ்லியா, ஷெரின், முகென் ஆகிய நால்வருக்கும் ஆதரவு இருந்து வந்தாலும் இதில் லாஸ்லியா மற்றும் முகெனுக்கு தான் அதிக ஆதரவு இருந்து வந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஒட்டிங்கில் முகென் முதலிடத்திலும் லாஸ்லியா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தார்கள் அது பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்ட ஒட்டிங்கில் மிகவும் தெளிவாக தெரிந்திருந்தது. நேற்றய நிகழ்ச்சில் ஷெரின் வெளியேறியதை அடுத்து லாஸ்லியா வெளியேறியிருந்தார்.

Image

லாஸ்லியா இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அவர் நேற்றய நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியில்ஆழ்ந்தனர். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் பேசிய கமல் இறுதி போட்டியில் 20 கோடி வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்தார். இது இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலேயே என்றும் குறிப்பிட்டிருந்தார். அதில் முகெனுக்கு 7 கோடிக்கும் மேல் அதிமான வாக்குகள் விழுந்ததாகவும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இறுதி வாரத்தில் யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தை பிடித்த முகெனுக்கு 7 கோடியே 43 லட்சம் வாக்குகளும் இரண்டாம் இடம் பிடித்த சாண்டிக்கு 5 கோடியே 63 லட்சம் வாக்குகளும் விழுந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் , மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்த ஷெரின் மற்றும் லாஸ்லியாவிற்கு 4 கோடிக்கும் குறைவான வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இது ஒருபுறம் இருக்க தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், முகின் “தளபதி 64” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement