சேரன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள். வைரலாகும் புகைப்படங்கள்.

0
86317
Cheran
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமே இல்ல. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லாருக்கும் தெரியும் 100 நாட்கள், கேமராக்கள், எந்த ஒரு தகவல் தொடர்பும் இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி செட்டே தெரிக்க விடுமளவிற்கு சூப்பராக இருந்தது. தமிழில் பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எப்பவுமே நம்ம உலக நாயகன் கமலஹாசன் தான். இந்த வருடம் நடந்த பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி உலக அளவில் ரசிகர்களிடையே பாராட்டும், வாழ்த்துக்களும் பெற்று வந்தன.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென். இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பெற்றார்கள். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் தான் சாக்ஷியும்,ஷெரினும். இவங்க ரெண்டு பேரும் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து சில நாட்களிலேயே வெளியே சென்றுவிட்டார். மேலும்,சாக்ஷி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கலகம் செய்து,சரியான புரிதல் இல்லாமல் ஒரு போலியான முகத்துடனே பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அதனாலே சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியவில்லை.

அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் ஷெரின் கடைசி வரை தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இறுதிவரை வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இவர் நேர்மையாகவும்,அனைவருடன் நல்ல நட்புறவுடனும் வந்துள்ளதால் பிக் பாஸ் குழு “பெஸ்ட் படி” என்ற பட்டத்தை ஷெரீனுக்கு தந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் ஷெரின். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் ஒரு சிறந்த நண்பர், அப்பா, அண்ணன் என்ற எல்லா உறவு முறைகளுக்கும் தகுதியானவர்களாக இருந்தவர் தான் இயக்குனர் சேரன்.

-விளம்பரம்-

இயக்குனர் சேரன் அவர்கள் திரையுலகில் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையிலும் சிறந்தவர் என்று இந்த பிக் பாஸ் வீட்டில் நிரூபித்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் ஷெரின் எப்பவுமே சேரன் மீது ஒரு நல்ல மரியாதையும் மதிப்பும் வைத்து உள்ளவர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட ஷெரின்,சாக்ஷி ஆகிய ரெண்டு பெரும் சேரனை சந்தித்து மகிழ்ந்து வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் தங்களுடைய தீபாவளியை ஷெரினும் ,சாக்ஷியும் சேரன் வீட்டிற்கு சென்று சேரன் குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடி வந்து உள்ளார்கள். மேலும், அவர்கள் தீபாவளி பண்டிகை போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெளிவந்துள்ளது. மேலும், அவர்களுடைய நட்பு பிக் பாஸ் வீட்டில் இருந்ததை விட வெளியே நல்ல முறையில் கொண்டு செல்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement