நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் 16 வயதில் நடித்த தன் முதல் படம் தான் இந்த படம். இந்த படத்தில் அவருக்கு நாயகியாக அந்த படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அப்படம் வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.
ஆரம்பகாலத்தில் அவ்வப்போது கிடைத்த விளம்பர படங்களில் நடித்து வந்தார். துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் ஜெயா, விசில், உற்சாகம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் முன்னணி நடிகையாக வளம் வர முடியாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் ஷெரின்.
இதையும் பாருங்க : அஜித், விக்ரமுடன் நடித்த நடிகை இப்போ எப்படி இருகாங்க பாருங்க.!
இதுவரை தமிழ் தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஷெரினுக்கு ராகுல் பாதிஜா என்ற காதலரும் இருக்கிறார், ராகுல் ஒரு தொழிலதிபர் ஆவர். ஷெரின் இவரை பார்ட்டி ஒன்றில் தான் சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் பிடித்துப்போக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில மாதத்திற்கு முன்னர் தான் ஷெரீனுக்கும் இவருக்கும் பிரேக் அப் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.