லீலா பேலஸில் நடந்த நிச்சயதார்த்தம். காரில் கெத்தாக வந்து இறங்கிய விஜய். வைரலாகும் வீடியோ.

0
59631
Vijay
- Advertisement -

தென்னிந்திய சினிமா துறையில் மாஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு நடிகர் அதர்வா சொந்தக்காரராக போகிறார். இந்நிலையில் அதர்வா தம்பிக்கும் விஜய்யின் உறவுக்காரர் பெண்ணுக்கும் தற்போது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடை பெற்றது. மேலும், இந்த நிகழ்விற்கு விஜய் அவர்கள் மாஸ் என்ட்ரி கொடுத்து உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகி வேற லெவல்ல தெறிக்க விட்டது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” என்ற படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் முடிவடைய உள்ளது. அதோடு இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்தார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் அதர்வாவின் தம்பிக்கும், தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் முரளி. ஆகவே முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாசுக்கும், சினிமாவில் பிரபலமான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் பேத்தி சினேகாவுக்கும் நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் அவர்கள் கருப்பு நிற காரில் வந்து இறங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு பிஸியான நிலையிலும் விஜய் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு இந்த திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதுமட்டும் இல்லாமல் படிக்கும் போதே இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின் மதப் பிரச்சினை காரணமாக இவர்களுடைய காதலுக்கு பல தடைகள் ஏற்பட்டு வந்தது.

இதையும் பாருங்க : இந்த நாளை கொண்டாடுங்கள் பெண்களே. பிரியங்கா வழக்கின் என்கௌண்டர் குறித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா.

- Advertisement -

சினேகாவின் பெற்றோர்கள் விமலா– பிரிட்டோ ஆவார். மேலும்,பிரிட்டோ பள்ளி, கல்லூரி, ஓட்டல், ரெஸ்டாரன்ட் என நடத்தி வரும் மிகப்பெரிய தொழிலதிபர். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரும் இவர் தான். தற்போது சினேகாவும் சினிமா துறையில் இயக்குனராக களமிறங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் பிசினஸ் நடத்தியும் வருகிறார். நடிகர் முரளியின் மகன் ஆகாசும் தற்போது படங்களில் நடிக்க தயாராக உள்ளார் என்றும் தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

பின்னர் காதலுக்கு மரியாதை படம் போலவே இவர்களுடைய காதலும் ஒரு வழியாக கிளைமாக்ஸுக்கு வந்து நிச்சயதார்த்ததில் முடிந்தது. அதோடு கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்களின் அப்பா –அம்மாவும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அதனால் தான் இவர்களுடைய கல்யாணத்திற்கு ஈசியாக சம்மதம் கிடைத்தது என்றும் ஒரு பக்கம் பேசி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement