விசில் படத்தின் Unseen புகைப்படத்தை பதிவிட்ட ஷெரின் – நாயகன் போட்ட கமெண்டை பாருங்க.

0
5718
sherin
- Advertisement -

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செரின் ஷிருங்கார். அதனை தொடர்ந்து இவர் ஸ்டுடென்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி, விசில், உற்சாகம், நண்பேண்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் மாடலாக தான் இருந்தார். பின் நடிகையாக ஆனார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் அவர்கள் மீண்டும் தமிழ் இளைனர்கள் மனதை கொள்ளை அடித்தார். இந்நிலையில் நடிகர் ஷெரின் அவர்கள் தான் நடித்த விசில் படத்தின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் விசில். இந்த படத்தில் விக்ரமாதித்யா, ஷெரின், விவேக், காயத்ரி ரகுராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ஆங்கில திகில் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நான் எதுவும் தப்பா பேசல, நான் பேசினது தப்புனா புராணத்தை ரோட்ல போட்டு கொளுத்திட்டு பேசுங்க – கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீண்டும் திமிர் பேச்சி.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நடிகை ஷெரின் பகிர்ந்து ஏன் இவ்வளவு சிறிஸாக இருக்கிறீர்கள் என்று பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த இந்த படத்தின் கதாநாயகன் நான் சீரியஸாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு ஷெரின் கூறியது, புது நபர்கள் இருக்கும் போது நான் அப்படித்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் விக்ரமாதித்யா அவர்கள் பம்பரக்கண்ணாலே, தொலைபேசி, கார்த்திகை போன்ற சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சினிமாவில் ஆளே காணம். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement