நான் எதுவும் தப்பா பேசல, நான் பேசினது தப்புனா புராணத்தை ரோட்ல போட்டு கொளுத்திட்டு பேசுங்க – கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீண்டும் திமிர் பேச்சி.

0
3246
karuppar
- Advertisement -

தமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடுயூப் சேனல் தான் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், கருப்பர் கூட்டம் யூடுயூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, நட்டி நாகராஜ், திரௌபதி இயக்குனர் மோகன், ராகவா லாரன்ஸ், வரலக்ஷ்மி சரத்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜ் கிரண் போன்ற பல்வேறு திரை பிரபலங்கள் கூட கறுப்பர் கூட்டத்தின் விடீயோவிற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், பல்வேறு தரப்பினரும் கறுப்பர் கூட்டம் தரப்பினர் மீது வழக்கும் பதிவு செய்தனர்

- Advertisement -

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை, கறுப்பர் கூட்டம் குழுவை சேர்ந்த 49 வயதை உடைய செந்தில் வாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய சுரேந்தர் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும், அவர் தண்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீனும் கோரி இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சுரேந்தர்,

கந்த சஷ்டி கவசம் குறித்து நான் தப்பாக பேசி விட்டேன் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த ஹிஸ்டரி கழுத்தில் இருக்கும் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வார்த்தை கூட நான் தவறாக சொல்லவில்லை. அதில் உள்ள விஷயங்களை மக்களுக்கு புரியும்படி சொன்னேன் அவ்வளவுதான் இதை சொல்லக் கூடாது என்கிறீர்களா ? இல்லை அதில் உள்ள வார்த்தைகள் தவறு என்கிறீர்களா ? என்று மீண்டும் கந்த சஷ்டி கவசத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் கொச்சையாக இருக்கிறது என்பது போல திமிராக பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

சுரேந்திரன் இந்த திமிர் பேச்சால் பிரபலங்கள் பலரும் மீண்டும் எரிச்சல் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து பதிவிட்டுள்ள திரௌபதி பட இயக்குனர் மோகன்’நான் இப்பவும் சொல்றேன்.. இவனுங்கள கைது செய்தோ, வழக்கு தொடுத்தோ திருத்த முடியாது.. மொத்தமா புறக்கணிக்கணும்.. சினிமாவில், இலக்கியத்தில் இவனுங்க வேரை பிடுங்கினால் இவர்கள் ஆட்டம் அடங்கும்.. இல்லனா இப்படி கேட்டுட்டே இருக்க வேண்டியது தான். என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement