விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை ஷிவானி. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ சமூக வலைதளம் தான். கடந்த சில மாதங்களாகவே சிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதிலும் மாலை 4 மணி 5 மணி என்று குறிப்பிட்ட சமயத்தில் இவர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதனாலேயே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து. இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஆனால், இன்ஸ்டாகிராமில் இவருக்கும் கிடைத்த ஆதரவு பிக் பாஸ் போட்டியாளர்களிடன் கிடைக்கவில்லை. சென்ற முதல் நாளே இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் மனஸ்தாபம் வந்தது. அதே போல முதல் வாரத்திலேயே இவர் அதிக ஹார்ட் பிரேககை வாங்கி வந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர் அதிகம் பேசவில்லை என்றாலும் காலையில் எழுந்தவுடன் பிக் பாஸ் போடும் பாடலுக்கு ஆட்டம் போட மட்டும் தவற மாட்டார்.
பிக்பாஸ் வீட்டில் ஷிவானி வந்த உடனேயே கண்டிப்பாக இந்த சீசனில் ஷிவானிக்கு ஒரு லவ் ஸ்டோரி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல பிக்பாஸ் வீட்டில் சிங்கிளாக இருக்கும் ஆண் போட்டியாளர்களில் பாலாஜி மற்றும் சோம் சேகர் மட்டும்தான். எனவே கண்டிப்பாக பாலாஜிக்கு ஒரு லவ் ஸ்டோரி துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாஜிக்கும் கேப்ரில்லாவிற்கும் செல்வதுபோல பிக்பாஸில் சில நிகழ்வுகள் வந்தது ஆனால் பாலாஜி கேப்ரில்லாவை தங்கச்சி என்று குறிப்பிட்டு விட்டார்.
அதேபோல கடந்த சில தினங்களாக பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே ஒரு வகையான கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது சிவானி, பாலாஜிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். ஆனால், டாஸ்க் முடிந்த பின்னரும் பாலாஜிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் ஷிவானி. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள Unseen வீடியோவில் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்ஸ் செய்துள்ளனர்.