படத்தில் நடிப்பது குறித்து ஷிவானியே சொன்ன பதில் – ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக். புலம்பும் ஹேட்டர்ஸ்

0
2274
- Advertisement -

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஷிவானி நடிப்பது குறித்து நம்பகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.

-விளம்பரம்-

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் முதல் படத்திலேயே கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் பல்வேரு சினிமா proகள் இந்த தகவலை ட்விட்டரில் உறுதி செய்து உள்ளார்கள். மேலும், ஷிவானியின் ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடிகை ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், ஏதாவது புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கீங்களா என்று கேட்டதற்கு ஆம், என்று சொல்லியுள்ளார் ஷிவானி. ஆனாலும், ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியா என்று பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement