நமீதா மாரிமுத்துவை போல இந்த சீசனிலும் ஒரு திருநங்கை – மிளா இல்ல, இவங்க தான் அது.

0
1543
namitha
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள போகும் திருநங்கை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
biggboss

அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது.

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

அந்த வகையில் நடன இயக்குனர் ராபர்ட், நடிகை ரக்ஷிதா, விசித்ரா, ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா, சோசியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார், நடிகை ஜாக்குலின், தீபா சங்கர், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகர் மகேஷ், சமீபத்தில் நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்த ரவீந்தர், அமுதவாணன், ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகை ஆயிஷா என பல பேர் அடிபட்டு வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களில் இருந்தும் சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த முறையும் நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கலந்து கொள்ள போகும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சிவின் கணேசன்:

கடந்த ஐந்தாவது சீசனில் முதன் முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்துவை பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த முறை சீசன் 6யிலும் சிவின் கணேசன் என்ற திருநங்கை கலந்து கொள்ள இருக்கிறார். இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ள இல்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்க்கிறார்.

Advertisement