பிக் பாஸ் வீட்டில் புகை பிடிப்பது இந்த 4 போட்டியாளர்தான்..! பொன்னம்பலம் அதிர்ச்சி தகவல்.!

0
347
Ponnambalam

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. போட்டியாளர்கள் செய்து வரும் பல அத்துமீறிய செயல்களால் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான அபிமானம் சற்று குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

smoking-room

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் அறைக்கு சென்று புகைப்பிடிகின்றனர் என்பது தெரியும். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாரெல்லாம் புகைபிடிக்கின்றனர் என்ற ரகசிய தகவலை கூறியுள்ளார் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் பொன்னம்மபலம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பொன்னம்மபலத்திடம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் ரூம் குறித்தும், வீட்டில் யாராரெல்லாம் புகைப்படுகின்றனர் என்று கேட்கப்பட்ட போது மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் புகைபிடிப்பார்கள் என்றும் வைஷ்ணவி கூட ஒரு ஸ்மோகர் தான் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல மும்தாஜ், பாலாஜி, டேனி ஆகியோருக்கு புகைபிடிக்கும் பழக்கம் எல்லை என்றும் நடிகர் பொன்னம்மபலம் தெரிவித்துள்ளார்.

Smoking-Area

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் மஹத் புகைபிடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஐஸ்வர்யா, யாஷிகா, வைஷ்ணவி ஆகியோர் புகைபிடிப்பார்கள் என்று பொன்னம்பலம் கூறியுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திக்கின்றது. இதை வைத்து பார்க்கும் போது நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் அடிக்கடி சண்டையிடுவது நியாயம் தான் என்று எண்ணம் தோன்றுகிறது. அவர் கூறியது போலேவே இதுபோன்ற பெண்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் இவர்கள் செய்யும் செய்லகளை கண்டு கலாச்சாரமும் சீரழிந்து தான் போகும் என்பதில் பொன்னம்மபலம் கூறி வந்தது தவறே கிடையாது.