சினேகன் கார் மோதி விபத்து – 28 வயது இளைஞர் உயிரிழப்பு. இரண்டு பிரிவுகளில் வழக்கு.

0
1170

கவிஞர் கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல கோடி ரசிகர்களை பெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. என்னதான் 4 சீசனை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான மற்றும் பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அதில் பாடலாசிரியரும் நடிகருமான சினேகனும் ஒருவர். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார்.

Image

பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர் பின் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நூலகம் ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த சினேகன் தற்போது பணங்காட்டு நரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம்ஆகி இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் பாபு இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த படத்தை பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு கமலின் மக்கள் நீதி மைய கட்சியில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த 16 ஆம் தேதி முன்னர் சினேகன் புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கைக்கு காரில் பயணம் செய்துள்ளார். காரை அவரே ஓட்டியதாக தெரிகிறது. திருமயம் அருகே வரும்போது சினேகன் ஓட்டி வந்த கார் எதிரே ஒரு இளைஞர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். பின்னர் உடனடியாக அவர் திருச்சியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞர் அருண் பாண்டி

விசாரணையில் விபத்தில் சிக்கிய அந்த 28 வயது இளைஞரின் பெயர் அருண் பாண்டி என்பதும் அவர் திருமயம் அருகே உள்ள ஆலமரத்து குடியிருப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. விபத்து குறித்து விசாரணை நடத்திய திருமயம் போலீசார் சினேகன் மீது 2 பிரிவுகளில் வழக்கம் தொடர்ந்தனர். இப்படி ஒரு நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் பாண்டி நேற்று (நவம்பர் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement