காசு கொடுத்தா கடவுளும் நடிப்பார்.! இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது.! சினேகன் அதிரடி.!

0
758
bigg-boss-snehan

கவிஞர் சிநேகனை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். தமிழ் சினிமாவில் பல்வேறு அற்புதமான பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ள சினேகன், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவிஞர் சினேகன், தமிழ் சினிமாவின் முன்னனி நடிக்கர்களை மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ளார்.

snehan

- Advertisement -

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ”சாட்சிகள் சொர்க்கத்தில்’படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) ஆஸ்திரேலியாவின் சிட்னி யாழ் மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சி கவிஞர் சினேனும் பங்குபெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஈழத்தமிழர்கள் பற்றி ஆவேசமாக பேசிய சினேகன், தமிழ் சினிமாவில் 100 கோடி 200 கோடி 500 கோடி என்று முதலீடு போட்டு படம் எடுக்கிறார்களே. ஏன் அவர்கள் இந்த படத்தை போல கவியத்தையோ, ஈழத்தமிழர்களின் வாழ்க்கைகளையோ எடுக்க கூடாது. காசு கூடுதல் கடவுளும் நடிக்க வருவார். முன்னணி உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு காசு தான் முக்கியமே தவிர மானம், மரியாதையை கிடையாது. முதலில் பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்காக படம் எடுங்கள், என்று ஆவேசமாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

snehan

சினேகன் அவர்கள் 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கி நடிக்கும் உச்ச நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது, தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்களை தான் குறிப்பிட்டுள்ளார் என்று சில பேச்சுகளும் அடிபட்டு வருகிறது. இருப்பினும் சினேகனின் இந்த தைரியமான பேச்சிக்கு ஒரு சில வரவேற்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது.

Advertisement