சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பெயரில் பாடகர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடலாசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்தும் இருக்கிறார். இருந்தாலும், இவர் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். தற்போது சினேகன் சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் அவர்கள் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்து இருந்தார்.
புகாரில் சினேகன் கூறி இருப்பது, நான் 2015ஆம் ஆண்டில் இருந்து சினேகம் பவுண்டேஷன் நடத்தி வருகிறேன். இது என்னுடைய சொந்தப் பணத்தில் மூலம் உருவாக்கினேன். இதன் மூலம் நான் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். நான் இதற்கு முறையாக income.tax செலுத்தி இருக்கிறேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. ஆனால், சமீபத்தில் என்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்கிறார்கள் என்று என் நண்பர்கள் கூறியிருந்தார்கள். பின் income.tax யிலும் என்னை விசாரித்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின் தான் இதை நடிகை ஜெயலட்சுமி செய்கிறார் என்று தெரிந்தது.
ஜெயலட்சுமி கொடுத்த புகார்:
இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி மீது கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறேன் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி கூறியது, நான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலில் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். அதன் மூலம் மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளை செய்து இருக்கிறேன். கொரோனா காலத்திலும் மக்களுக்கு என்னுடைய சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால், சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாக பயன்படுத்தி பொதுமக்களை தனியாக சந்தித்து பணம் பறிப்பதாக புகார் அளித்திருக்கிறார். இது முற்றிலும் பொய்.
ஜெயலட்சுமி அளித்த புகார்:
என் பெயரை களங்கப்படுத்துவதற்காக அவர் இந்தக் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதமே சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தது. அதன் பின் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால், சிநேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
நீதிமன்றம் போட்ட உத்தரவு:
இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பேராசிரியர் சினேகன் மீது வழக்கு வழக்கு பதிவு செய்து அடுத்த மாதம் 19 ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆணையத்திற்கு உத்தரவு போடுவது போடப்பட்டிருக்கிறது நீதிமன்றம். இதனை அடுத்து நீதிமன்றம் கொடுத்த உத்தரவை காவல் ஆணையத்தில் கொடுத்து விட்டு நடிகை ஜெயலட்சுமி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், சிநேகம் அறக்கட்டளை மூலமாக பண மோசடியில் ஈடுபட்டதாக என் மீது சினேகன் பொய்யான புகார் அளித்தார்.
நடிகை ஜெயலக்ஷ்மி அளித்த பேட்டி:
இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மூன்று முறை அழைத்து விசாரணை செய்து இருந்தார்கள். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் தெரிவித்தார்கள். சினேகன் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கொடுத்த பொய் புகார் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதனால் நான் எழும்பூர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்திருந்தேன். தற்போது பாடல் ஆசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. தர்மம் மீண்டும் வென்றது என்று கூறியிருந்தார்.