எளிய மக்களிடம் dynamic திருமணம் என பொய் சொல்லி ஏமாற்றிய சினேகன் ஏன் Dynamic திருமணம் பண்ணல – சினேகனின் பழைய வீடியோவை பகிர்ந்து வெளுத்து வாங்கும் நெட்சன்ங்கள்.

0
69253
snehan
- Advertisement -

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.சினேகனுக்கு இன்று நடிகை கன்னிகாவுடன் திருமணம் நடைபெற்று உள்ளது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான். இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கமல் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சினேகனின் திருமணம் சில விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினேகன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். அந்த திருமணம் dynamic புரட்சி திருமணம் என்று கூறப்பட்டது. இந்த திருமணத்தில் பேசிய சினேகன், ஆரிய வர்கத்தின் ஆர்ப்பரிப்பு ஆக்ரமிப்பும் தமிழன் மீது விழுவதற்கு முன்னாள் எப்படி இருந்தானோ அப்படியே மீட்டுக் கொண்டுவரும் ஒரு புரட்சி தான் இந்த டைனமிக் திருமணம்.

இதையும் பாருங்க : பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் ரோல் இது தானாம். படக்குழுவுக்கு முன்பே கசியவிட்ட ரெக்க பட சிறுவன். (இளம் கன்று பயமறியாது)

- Advertisement -

இதை போக போக இந்தியர்களும் தமிழர்களும் தெரிந்து கொள்வார்கள். இன்னும் 10 வருடத்தில் ஒரு அரசியல் புரட்சியை இந்த டைனமிக் திருமணம் ஏற்படுத்த போகிறது என்று கூறி இருந்தார். சினேகன் பேசி முடித்த பின் நடைபெற்ற இந்த திருமணத்தில் விதவை பெண்கள் மாலை எடுத்துக்கொடுக்க தாலி காட்டாமல் இந்த திருமணம் நடைபெற்றது.

மேலும், திருமணத்திற்கு பின்னர் மன மக்களை வாழ்த்த வந்த பலரும் பாரபட்சம் பார்க்காமல் மணமக்களை கட்டி தழுவி முத்தமும் கொடுத்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், சினேகன் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை எதுவுமே அறியாத எளிய மக்களிடம் dynamic திருமணம் என பொய் சொல்லி ஏமாற்றிய சினேகன். இபோது அவர் திருமணத்தையும் இதே போல செய்வாரா?? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement