பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் ரோல் இது தானாம். படக்குழுவுக்கு முன்பே கசியவிட்ட ரெக்க பட சிறுவன். (இளம் கன்று பயமறியாது)

0
12964
ayswarya
- Advertisement -

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம்.

-விளம்பரம்-

மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள்,. கொரோனா பிரச்சனை காரணமாக அந்தத் திட்டத்தை கைவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இதையும் பாருங்க : சார்பட்டா படத்தை பார்த்துவிட்டு சூர்யா போட்ட ட்வீட் – ஏமாற்றத்தில் புலம்பிய ரசிகர்கள். ஏன் தெரியுமா ?

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் ரோலை கசியவிட்டுள்ளார் ரெக்கை பட குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் ராகவன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரெக்க படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்தவர் மாஸ்டர் ராகவன். இந்த படத்திற்கு பின்னர் பல்வேரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஐஸ்வர்யா ராயுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில், நந்தி தேவி மற்றும் பாண்டிய இளவரசன் என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் படக்குழு அறிவிப்பதற்கு முன்பாகவே ஐஸ்வர்டயா ராயின் ரோலை கசியவிட்டு இருக்கிறார் மாஸ்டர் ராகவன்.

-விளம்பரம்-
Advertisement