நிறைவேற போகும் தந்தையின் ஆசை. சினேகனுக்கு விரைவில் திருமணம். பெண் இந்த சீரியல் நடிகை தானமே ?

0
2247
snehan

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால், பலரும் சினேகன் தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று கூறினர். அதே போல நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன்.

Kannika Ravi (Actress) Wiki, Biography, Age, Family, Images, Serials,  Movies, Serials

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

இதையும் பாருங்க : டாக்டர்ஸ் இப்படி சொல்றாங்க – தீவிர சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவின் நிலை குறித்து அவரது தந்தை.

- Advertisement -

சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர் பின் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். தற்போது 43 வயதாகும் சினேகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனின் தந்தை வந்த போது சினேகனுக்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது கடைசி ஆசை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினேகன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது சினேகனுக்கு இந்த மாதமே திருமணம் நடைபெற இருக்கிறதாம். சினேகன் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement