டாக்டர்ஸ் இப்படி சொல்றாங்க – தீவிர சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவின் நிலை குறித்து அவரது தந்தை.

0
2250
yashika

சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை ஸ்ரீதேவி.

- Advertisement -

இந்த விபத்தில் யாஷிகாவுடன் பயணதித்த அவரின் தோழி வள்ளி செட்டி பவனி என்ற 28 வயது பெண் உயிரிழந்துள்ளார். மேலும், படு காயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருக்கு காயம் அதிகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் அவர்  ‘critical care’ -ல் திவீர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இப்படி ஒரு நிலையில் தனது மகளின் விபத்து குறித்து பேசியுள்ள யாஷிகாவின் தந்தை, நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன். யாஷிகாவின் நிலை கிரிட்டிக்கலாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நான் சென்னைக்கு விரைந்துகொண்டிக்கிறேன் என்று மிகவும் சோகத்துடன் தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement