‘ஆசீர்வாதம் பண்ணும் போது கூட செருப்ப கழட்ட தோனல’ – இளையராஜாவை விமர்சித்த நெட்டிசனுக்கு சினேகன் மனைவி கொடுத்த விளக்கம்.

0
4939
Snehan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். சினேகன் அதற்கு முன்னர் சினிமாவில் பல்வேரு பாடல்களை எழுதி இருந்தாலும், இது எல்லாம் இவர் எழுதிய பாடலா என்று பிக் பாஸ் பின்னர் தான் பலருக்கும் தெரியவந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸுல் இருந்த போது இவர் சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து கொண்டே இருந்ததால் இவருக்கு கட்டிப்பிடி வைத்தியர் என்ற பட்டமும் கிடைத்தது. அதே போல 40 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்த சினேகன், தன்னை விட 16 வயது சின்ன பெண்ணான கன்னிகா என்ற சீரியல் நடிகையை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கன்னிகாவை திருமணம் செய்ததில் இருந்தே சினேகன் ஒரு 10 வயது குறைந்த இளைஞர் போலவே இருந்து வருகிறார். இருவரும் சேர்ந்து அடிக்கடி சமூக வளைத்ததில் புகைப்படங்களை பதிவிடுவது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது என்று ஒரு 2கே இளைஞரை போலவே மாறிவிட்டார் சினேகன். சமீபத்தில் தான் கன்னிகா ஒரு மூலிகை ப்ராடக்ஸ்டஸ் தொழில் ஒன்றை துவங்கி இருந்தார்.

இளையராஜாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு பல்வேறு துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என்று வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் சினேகன் கன்னிகா ஜோடி அவரது இல்லத்திற்கே சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவரிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார்கள். அந்த வீடியோவை கன்னிகா தங்களுடைய விசாரணை பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் ‘ஆசீர்வாதம் பண்ற போது செருப்ப கழட்டனும்னு தோனல அவருக்கு. ஆசீர்வாதம் வாங்கும் போது கால தொட்டு தான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என்று கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த கன்னிகா ‘அவர தப்பா நினைக்காதீங்க.அவருக்கு சில மெடிக்கல் பிரச்சனைனால அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாங்க’ என்று பதில் கூறியுள்ளார்.

சினேகன் திருமணம் நடைபெற்ற போது அவரது திருமணத்திற்கு பல்வேரு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், சினேகனின் திருமணத்திற்கு வர முடியாத இளையராஜா, சினேகன் – கன்னிகா தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்ததோட அவர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தையும் கல்யாண பரிசாக அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement