தன்னை வளர்த்த தாய்க்கு சினேகன் மனைவி கன்னிகா பரிசு கொடுத்துள்ளது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இதுவரை இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சினேகன் – கன்னிகா திருமணம்:
பின் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் இவர்கள் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும், நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில் நடித்து இருக்கிறார். அதோடு தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் கூட இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன்:
திருமணத்திற்கு பின் இருவரும் நேர்காணல்,வீடியோ என்று காதல் ஜோடிகளாக திகழ்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து சினேகன் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், இந்த சீசனில் அவரின் பெயர் படு டேமேஜ் ஆனது.
கன்னிகா கொடுத்த பரிசு :
சினேகன் மற்றும் கன்னிகாவும் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ அனைவரையும் நெகிழ செய்துள்ளது.தனது வளர்ப்பு தாய்க்கு செல்போன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கன்னிகாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்