பிக் பாஸ் பிரபலம் சினேகன் மனைவி கன்னிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இதுவரை இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சினேகன் – கன்னிகா திருமணம்:
பின் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் இவர்கள் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும், நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில் நடித்து இருக்கிறார். அதோடு தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் கூட இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன்:
திருமணத்திற்கு பின் இருவரும் நேர்காணல்,வீடியோ என்று காதல் ஜோடிகளாக திகழ்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து சினேகன் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சினேகன்:
இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சினேகன் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன் தான் இவர் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு கன்னிகா தன் கணவர் சினேகன் உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
கன்னிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:
இந்த நிலையில் கன்னிகா தன்னுடைய டாம் பாய் லுக்கில் உள்ள புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். கன்னிகாவின் முடி மிக நீளமாக இருக்கும். இதனால் பலரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். பின் உங்களின் நீளமான முடிக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு கன்னிகா, கேப்ஷனிலேயே ’it’s not a original hairstyle ‘ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் முடி வெட்டவில்லை,டோப்பா என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.