அட, தனுஷ் இயக்கிய பா பாண்டி படத்தில் சோம் சேகர் நடிச்சிருக்காரே. இது வரை இத நோட் பண்ணீங்களா ?

0
111784
som
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லதா பல புது முகங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர், அந்த வகையில் சோம் சேகரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

- Advertisement -

இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவில் MMA போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கூட வென்று இருக்கிறாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை.

வீடியோவில் 1 : 48 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் இவர் பா பாண்டி படத்தில் நடித்திருக்கிறார் என்ற விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பா பாண்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற ‘வானம் பறந்து பார்க்கையில்’ என்ற பாடலில் சோம் சேகர் ஒரு சிறு காட்சியில் தோன்றியுள்ளார் சோம் சேகர்.

-விளம்பரம்-
Advertisement