Vip 2 படத்தில் கஜோலின் குமாஸ்தாவாக நடித்துள்ள சோம் சேகர் – அதுவும் இத்தனை காட்சியில் வந்திருக்காரே.

0
1372
som
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லதா பல புது முகங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர், அந்த வகையில் சோம் சேகரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு முன்னர் ஆல்யா மானஸா மழையில் சொட்ட சொட்ட நனைந்து போட்ட ஆட்டத்தை பாருங்க.

- Advertisement -

இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவில் MMA போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கூட வென்று இருக்கிறாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை.

அதே போல இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். அதே போல தனுஷ் இயக்கிய ‘பா பாண்டி’ படத்தில் கூட ஒரு பாடலில் தோன்றி இருப்பார். இப்படி ஒரு நிலையில் இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை கஜோலின் குமாஸ்தாவாக பல காட்சிகளில் தோன்றி இருக்கிறார் என்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement