ரம்யாவை நினைத்து இன்ஸ்டாவில் train விட்டு வரும் சோம் – என்ன பதிவிட்டுள்ளார்னு நீங்களே பாருங்க.

0
5143
som

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக லவ் ஸ்டோரி என்பது இருக்கும். ஆனால் சமீபத்தில் சீசனில் ஆரம்பத்தில் பாலா – கேபி லவ் கெமிஸ்ட்ரியை உருவாக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தது, அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை தொடர்ந்து ஷிவானி – பாலா காதல் கதை ஓடியது. ஆனால், பாலா தனக்கு காதல் எல்லாம் இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால், இந்த சீசனில் பெரிதாக எந்த ஒரு லவ் டிராக்கும் எட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

ஆனால், ரம்யா பாண்டியனின் சகோதரர் பிக் பாஸ் வீட்டுக்கு என்று வந்த பின்னர் சோம் சேகருக்கும் ரம்யாவிற்கு முடிச்சி போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். அதே போல சோம் – ரம்யா இருவருக்கும் சாக்லேட் மேட்டர் முதலே ஒரு விதமான கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பலரும் பிக் பாஸ் வீட்டில் கிளப்பிவிட்டு இருந்தனர். அதே போல Freeze Task-ன் போது உள்ளே சென்ற ரம்யா பாண்டியனின் சகோதரர் சோம் சேகரை மச்சான் என்று கூப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

அதே போல ரம்யா பாண்டியன், சோம் சேகருக்கு கொடுத்த சாக்லேட்டை நீண்ட நாட்களாக சாப்பிடாமல் வைத்திருந்தார். இறுதியாக சோம் சேகர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது வெளியில் செல்லும் முன்னர், ஓடிச்சென்று ரம்யா கொடுத்த அந்த சாக்லேட் கவரை ரம்யாவிடமே கொடுத்துவிட்டு சென்றார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோம், ரம்யாவை பற்றிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதே போல தோனி படத்தில் வரும் ‘என்னோடு சேர்ந்து செல்லடி’ பாடலை போட்டு ரம்யாவை நினைத்து உருகியுள்ளார் சோம்.

இது ஒருபுறம் இருக்க பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியனிடம், ரம்யா மற்றும் சோம் இருவரும் திருமணம் செஞ்சிக்கிட்டா உங்களுக்கு ஓகேவா என்று கேட்கப்ட்டதற்கு, அது அவளுடைய விருப்பம் அவளுக்கு பிடிச்சா பன்னிகிட்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரம்யா பாண்டியனின் சகோதரர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்து சோம் சேகருடன் நேரத்தை கழித்து நன்றாக இருந்தது. தங்கமான மனுஷன் என்று கூறி இருந்தார் . இந்த பதிவிற்கு கீழ் சோம் சேகரின் ரசிகர் ஒருவர், அப்போது அவர்கள் இருவரும் ஒன்று சேருவதை நீங்கள் விருப்புகிறீர்களா என்று கேட்டதற்கு அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement