ஆரி குறித்து போட்ட மோசமான டீவீட்டை பிக் பாஸுக்கு முன் டெலீட் செய்த சுச்சி. இதோ அந்த ட்வீட்.

0
6972
suchi
- Advertisement -

ஆர் ஜேவும் பின்னணி பாடகியுமான சுசித்ரா பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் சுசிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவை சார்ந்த பல்வேறு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களையும் ரகசியங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் இது குறித்து தெரிவித்த சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய பெயரில் வேறு யாரோ இதை எல்லாம் செய்கிறார் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாடகி சுசித்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரி, வேல்முருகன், சோம் சுந்தர் ஆகியோர் குறித்து குற்றம் சாட்டி இருக்கிறார். இதுகுறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ள சுசித்ரா ‘ ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது ஆரி மாணவர் சமூகத்தை திமுக சார்பாக அணிதிரட்டினார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்த மூன்று பேரும் பிக் பாஸ் வீட்டில் ‘விவசாயி’ என்று சொல்வதை நிறுத்த மாட்டார்கள். விவசாயியா ? அவங்களுக்கு என்ன இப்போ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சுசித்ராவின் இந்த பதிவை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர் ‘உங்களுக்கு நான் ஒன்றை நினைவு படுத்துகிறேன்; கடந்த எம்பி தேர்வில் திமுக தான் வெற்றி பெற்றது’ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது’ திமுகவிற்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். ஆனால், நீங்கள் 16 பேரில் அந்த மூன்று பேரை மற்றும் குறிப்பிட்டு சொல்கிறீர்கள். விவசாயி குறித்து பேசினால் உங்களுடைய பிரச்சனை’ என்ன என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சுசித்ரா ‘விவசாயின்னு சொன்னா பத்தாத. விவசாயிக்கு என்ன இப்போ ? திமுக பிக்பாஸ நல்லா திட்டமிட்டு ஒரு வாகனமாக பயன்படுத்துகிறது. விவசாயின்னு முதல் நாளே ஒரு நாளைக்கு பத்து தடவை சொன்னால் பத்தாது. மேலும் அவருடைய பேரு சோமுவோ/சொம்புவா ? எனக்கு சரியாக தெரியவில்லை அவர் ஆரிக்கு நல்லா சொம்படிக்கிறார். என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த டீவீட்டை எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னாள் டெலீட் செய்துள்ளார் சுச்சத்ரா.

-விளம்பரம்-
Advertisement