பிக் பாஸில் இருந்து வெளியில் சென்ற போது இதையும் கையோடு எடுத்து சென்றுள்ள சுச்சி. அதில் என்ன வரைந்துள்ளது பாருங்க.

0
2297
suchi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாளான கடந்த ஞாயிற்று கிழமை (நவம்பர் 22) சுசித்ரா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறிய போது போட்டியாளர்கள் பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டு தான் சென்றார்.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றதும் சிறிது நாட்கள் சமூக வலைத்தள பக்கம் செல்ல மாட்டேன் என்று கூறி இருந்தார் சுச்சி. ஆனால், பிக் பாஸில் இருந்து வெளியேறிய அடுத்த நாளே இவர் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது எப்போதும் கையில் வைத்துக்கொண்டு இருந்த ஸ்மைலி அட்டையை எடுத்து சென்று உள்ளார். அதில் மிர்ச்சி சுச்சி என்பதை குறிக்கும் வகையில் மைக் மற்றும் ரேடியோ மிர்ச்சி லோகோவையும் வரைந்து வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement