ஆரிய எனக்கு புடிக்காது, சாத்தானின் வக்கீல் – ஆனா, இதுக்காக தான் சப்போர்ட் பண்ணேன் – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா.

0
3082
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத, ஷிவானி கேப்ரில்லா ஆகியோர் வெளியேறி நிலையில் இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த சீஸனின் முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து இருந்தார் ஆரி. இப்படி ஒரு நிலையில் ஆரியை பற்றி கடுமையாக விமர்சித்து உள்ளார் சுச்சி.

இதையும் பாருங்க : மேனேஜரால் காதலுக்கு மரியாதை பட வாய்ப்பை இழந்துள்ள சாக்லேட் ஹீரோ – யார் தெரியுமா ?

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், கமல் பற்றியும், ஒரு சில போட்டியாளர்கள் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சுச்சி. இப்படி ஒரு நிலையில் சுச்சத்ராவிடம் ரசிகர் ஒருவர், ஆரி கூட ஒரு செல்பி எடுத்து போடுங்க என்று கேட்டதற்கு, த்த்தூ, அதுக்கு நான் செத்தே போயிரலாம் என்று கூற, அதற்கு அந்த ரசிகர், உங்களுக்கு தான் ஆரி புடிக்குமே என்று சொல்ல ‘எனக்கு அவர புடிக்காது, அவர் இந்த சில்லி ஷோவை ஜெயித்தால் தன அவரது முட்டாள் தனமான திமிர் பூர்த்தியாகும், அதனால் தான் அவருக்கு சப்போர்ட் செய்தேன், சாத்தானின் வக்கீல் ‘ என்று பதில் அளித்துள்ளார்.

இந்த சீசனில் அர்ச்சனாவிற்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் சுசித்ரா தான். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கொஞ்ச நாள் பாலாவுக்கு தான் ஆதரவாக பேசி வந்தார். ஆனால், அதன் பின்னர் அவரை பற்றியும் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்.

-விளம்பரம்-

பிக் பாஸுக்கு பின் பாலாவிற்கு ஆதாரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்த சுச்சி, பின்னர் அவரையும் குறை சொல்ல ஆரம்பித்தார். அதிலும், பாலாவிற்கு வோட் போடாதீங்க என்று கூறிய சுச்சி, ஆரி மட்டும் டைட்டில் ஜெயிக்கலன்னா அது மிகப்பெரிய அநியாயம். நீங்க அவரின் ரசிகரோ இல்லையோ தயசு செஞ்சி அவருக்கு ஓட்டு போடுங்க. நிஜ வாழ்க்கையின் ஹீரோ.மேலும், ஆரிக்கு தன்னுடைய 50 வாக்குகளையும் அளித்துவிட்டதாகவும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-96-1024x864.jpg

அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுச்சயிடம், ஆரியை ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸ்ஸும் ஏன் வெறுக்கிறார்கள், அப்படி என்னதான் செய்தார் என்று ரவீந்திரன் கேட்டதற்கு பதிலளித்த சுசித்ரா, சொல்லா ஆரிக்கு பயம் என்றால் என்ன என்று தெரியாது. அந்த ஆளுக்கு அவமானமாக இருக்கட்டும் பின்னால் குத்துவதாக இருக்கட்டும் முன்னால் பேசி சிரிப்பதாக கூட இருக்கட்டும். இது வெளியில் யாருக்காவது நடந்தால் ஒரு சின்ன குழந்தை கூட வந்து கேட்கும் ஏன் இந்த ஆளை இப்படி செய்கிறீர்கள் என்று. ஆனால், அவருக்கு 100% பயம் என்றால் என்ன என்று தெரியாது. ஏதோ நாலு பேர் நம்மைப் பற்றித் தவறாகச் சொன்னால் அதைத்தான் வெளியில் இருக்கும் அவர்கள் நம்புவார்கள் என்பதை பற்றி கூட கவலைப் படாத ஒரு ஆள் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement