4 பெற ஒருத்தன் ரூட் விடுறான் அது உங்களுக்கு காமெடி.! நல்ல மனுசன வெளியே அனுப்பிடீங்களே.! குமுறும் பிரபலம்.!

0
30755
saravanan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் உரசி சில்மிஷம் செய்துள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், அந்த விசயத்திற்கு சரவணன் பகிரங்க ,மன்னிப்பு கேட்ட நிலையிலும் சரவணன் பேசி முடித்த பல நாட்கள் கழித்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ஒரு தரப்பினர் வரவேற்றாலும் அதிகப்படியான நபர்கள் சரவணன் வெளியே அனுப்பப்பட்டது தவறு என்று தான் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : சரவணன் மன்னிப்பு கேட்கும் போது சொன்ன விடயம் பொய் இல்லை.! ஆதாரம் இந்த வீடியோ தான்.! 

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் சுஜா வருணியின் கணவரும், சிவாஜி குடும்பத்தை சேர்ந்த சிவகுமார், சரவணன் வெளியேற்றபட்டது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஒரு நல்ல மனுஷன் உங்க கேவலமான தந்திரத்தை அறியாமல் நிம்மதியாக சாப்பிட்டு இருந்தார் அவரை கன்வெர்ஷன் ரூம் இருக்கு அழைத்து போறேன்னு சொன்ன மனுஷனை இருக்க வச்சு அவர் ஏன் இவ்வளவு கேவலப்படுத்திய முதல் தொலைக்காட்சி விஜய் டிவி தான்.

அவரு பேசுன முழு விஷயத்தை நேரமின்மை காரணமாக நீக்கப்பட்டது என்று சொல்றீங்க. ஆனால், தமிழ் பெண்கள் மீதும் உலகத்தில் இருக்கும் பெண்கள் மீதும் மரியாதை உண்டு என்று சொல்லி மன்னிப்பு கேட்டாலும் அவரை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சொன்ன மிஸ்டர் பிக் பாஸ், எதற்காக உங்கள் குழுவிற்கு இந்த பிரச்சினையை ஆராய ஒரு வாரம் தேவைப்பட்டது.

-விளம்பரம்-

கேள்வி கேட்டது மக்களின் பிரதிநிதி ரசிச்சு கைதட்டியது ரசிகர்கள், கைதூக்கி நானும் கல்லூரி காலத்தில் செஞ்சிருக்கேன் சொல்லிட்டு அதுக்கப்புறம் செஞ்ச தப்ப இந்த தலைமுறை பண்ண கூடாதுன்னு சொன்ன சரவணன்,பஸ்ல பெண்களை உரசுவதற்கு என்றேய வருவாங்கன்னு கமல் சொன்னார். ஆனால், சரவணன் சொன்னது அந்த நோக்கத்தில் இல்லை. அப்படி தப்புன்னா கைத்தட்டிய ரசிகர்களையும் கமல் கண்டித்திருக்க வேண்டும் விஜய் டிவியோட இந்த நியாயம் மிகவும் மோசமாக இருக்கிறது.

என்னவோ விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் மிகப்பெரிய பெண்கள் பாதுகாவலர்கள் பீத்தல். ஒருத்தன் அங்க நாலு பேரை ஒரே நேரத்துல ரூட் விட்டுட்டு அலைகிறான் கண்ணு முன்னாடி அது உங்களுக்கு காமெடி இந்த ஏற்ற பொழப்புக்கு மிகப்பெரிய சரிவை சந்திப்பீர்கள் என்று மிகவும் கோபமாக சமன் செய்துள்ளார்

Advertisement