சரவணன் மன்னிப்பு கேட்கும் போது சொன்ன விடயம் பொய் இல்லை.! ஆதாரம் இந்த வீடியோ தான்.!

0
17842
saavanan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் ஒரு செய்துள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

ஒரு தேசிய தொலைக்காட்சியில் நடிகர் ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷயத்தை பேசியுள்ளார் என்ற விஷயம் தேசிய தொலைக் காட்சிகளிலும் சமூக ஓரங்களிலும் ஊடகங்களிலும் பெரும் வைரலாக பேசப்பட்டது இதனால் சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்து வந்தது.

- Advertisement -

இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது பேசிய சரவணன் நான் கல்லூரி படிக்கும் போது பல்வேறு தவறுகளை செய்துளேன். அதே தவறை யாரும் செய்ய வேண்டாம் என்பதை தான் நான் சொல்ல வந்தேன். இருப்பினும் தான் பேசியது தவறு தான் என்று பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சரவணனை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், நீங்கள் பெண்களை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளளது. நீங்கள் மன்னிப்பு கேட்ட போதிலும் கடந்த வாரம் சேரன் மற்றும் மீரா விடயத்தில் கவனம் செலுத்தியதால் உங்கள் விடயத்தை கவனிக்க முடியவில்லை. எனவே, இந்த வாரம் நீங்கள் வெளியேற்ற படுகிறீர்கள் என்று சரவணன் காண்பேசன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த விஷயம் ரசிங்கர்களுக்கு பெரும் சாக்கை ஏற்படுத்தியது. ஆனால், சரவணன் மன்னிப்பு கோரிய போது சொன்ன அதே காரணத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement