அட , கடவுளே அர்ச்சனா வெளியேறுவார்னு பாத்தா, இவரு வெளியேறி இருக்காராம்.

0
1421
biggboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 4 வாரத்தை நிறைவு செய்து ஐந்தாவது துவாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே போல கடந்த வாரம் ஆரி, இனிமேல் யார் யார் என்னென்ன செய்கிறீர்கள் என்பதை நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்வேன் என்றார்.

This image has an empty alt attribute; its file name is 1-30.jpg

அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் முழுக்க பல இடங்களில் பல உண்மைகளை தைரியமாக கூறியிருந்தார். நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆரி, நிஷா, சோம் சேகர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் டாஸ்க் மூலம் ஆரி அடுத்த வார கேப்டனாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வாரம் பல மாற்றங்களை கூட கொண்டுவந்துள்ளார் ஆரி. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் சனம் – பாலாஜி விவகாரத்தில் பாலாஜி சொன்ன அட்ஜஸ்ட்மென்ட் / காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையால் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.

- Advertisement -

இதனால் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுப்பட்டு அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இது ஒருபுறமிருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, அனிதா, பாலாஜி, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சோம் சேகர், சுரேஷ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். பல்வேறு தனியார் இணைய தளத்தில் நடத்தப்பட்டுவரும் வாக்கெடுப்புகளில் இந்த வாரம் பாலாஜியை விட ஆரிக்கு தான் அதிக அளவில் வாக்குகள் இருந்து வருவதாக தெரிகிறது.

This image has an empty alt attribute; its file name is 1-29.jpg

மேலும் சோம், சுரேஷ், அர்ச்சனா ஆகிய மூன்று பேருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உன்மையில் பலரும் இந்த வாரம் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர். அதே போல சுரேஷ் ஒரு வேலை வெளியேறினால் அவரை ரகசிய அறையில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement