விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . காதல் சண்டை சர்ச்சை என்று அனைத்து கலவையும் ஆக கடந்த சீசன் சேர்ந்து இருந்தது இந்த சீசன் மிகவும் சுவாரசியமாக செல்ல மிகவும் முக்கிய காரணமாக இருந்தது வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தான் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று. பிக்பாஸ் வீட்டில் இவர் வத்திகுச்சி என்று பட்டப்பெயரை எடுத்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கலவரம் வெடித்ததுக்கு இவர்தான் காரணம்
ஆரம்பத்தில் வெறும் காதல் மயமாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கொளுத்தி போட்ட பின்னர் தான் கொஞ்சம் சண்டைகள் வெடித்தது. பின்னர் அதே ரூட்டை பின் தொடர்ந்து இவர் பல போட்டியாளர்கள் இடம் சிண்டு முடிந்து விட்டு சண்டையை உருவாக்கி இருந்தார். இதனாலேயே பல போட்டியாளர்களும் சண்டை வெடித்து நிகழ்ச்சியும் கொஞ்சம் சூடு பிடிக்கத் துவங்கியது. இருப்பினும் ரசிகர்கள் இவரை ஒரு சில வாரங்களிலேயே வெளியே அனுப்பிவிட்டார்கள். ஆனால் இவர் சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாகவே இல்லை என்று பலரும் கூறி வந்தனர்.
இதனாலேயே இவரை சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்து, ஒரு சில வாரங்கள் தங்க வைத்து இருந்தார்கள். இதனால் மீண்டும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டு மீண்டும் நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் வனிதாவாக சுரேஷ் சக்கரவர்த்தியை தான் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் சக்கரவர்த்தியே வனிதா குறித்து பேசியிருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி, வனிதனைப் பற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் , கடந்த சீசனில் ஒருவர் அனைவராலும் வேறுக்கப்பட்டார். ஆனால் அவர்தான் அனைவரையுமே புரட்டி எடுத்துவிட்டு சென்றார். அவர் பேசியது அனைத்தும் சரி, ஆனால் அவர் கொஞ்ச அனைத்துமே கோபமாக சொல்லிவிட்டார். அதுதான் அவர் செய்த தவறு. அவர் கோபமாக சொன்னாலும் அவர் சொன்ன அத்தனையும் உண்மைதான் அந்த வகையில் இந்த வீட்டில் அவரைப்போல மாறும் வாய்ப்பு இருப்பது ரம்யா பாண்டியன் தான் என்று கூறியிருக்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி.