-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

தாமரை கிடைத்த முதல் சினிமா வாய்ப்பு – யார் யாருடன் போட்டோ வெளியிட்டுள்ளார் பாருங்க.

0
438
thamarai

பிக் பாஸ் தாமரைக்கு சினிமாவில் ஜாக்பாட் அடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது.

-விளம்பரம்-
thamarai

இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். அதுமட்டும் இல்லாமல் இந்த 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமயமில்லாத பலர் பங்கேற்று இருந்தனர். அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. இவர் மேடை நாடக கலைஞர். மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை. மேலும், முகம் தெரியாத நபராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் தாமரை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரை:

நிகழ்ச்சி ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. தாமரை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்றே சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தாமரைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதற்கு பின் தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தார்கள். இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பட்டத்தை வென்று இருந்தார். மேலும், இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்து இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் தாமரை தன்னுடைய கணவருடன் சேர்ந்து பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் தாமரை தன்னுடைய கணவருடன் சேர்ந்து பல கெட்டப்புகளில் நடனமாடி கலக்கியிருந்தார். பிக் பாஸை விட இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தான் தாமரைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் தாமரை கலக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் தாமரை வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அமீர் – பாவனி டைட்டில் பட்டதை தட்டி சென்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் தாமரைக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தாமரை நடிக்கும் படம்:

அதாவது, நம்ம தாமரை தற்போது படத்தில் நடித்து வருகிறார். அதற்கான புகைப்படத்தை தான் தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். படத்தில் ரோபோ சங்கரும் நடிக்கிறார். படத்தில் தாமரை உடைய கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. தாமரை படத்தில் நடனம் ஆடுகிறாரா? இல்லை கதாபாத்திரமாக நடிக்கிறாரா? என்ற தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தாமரை படத்தில் நடிக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தாமரைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news