அடுத்த சீசன் விஜய் டிவியில் இல்லை…தொகுப்பாளர் இவர்தான்.! பிக்பாஸ் மேடையில் அறிவித்த கமல்

0
241
Kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வின் இறுதிப்போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு சீசனிலும் தொகுப்பாளராக இருந்து வந்த கமல் பிக் பாஸ் மேடையை தனது அரசியல் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொண்டார்.அதனை பல முறை கமலே கூறியுள்ளார்.

colors tv

சீசன் 2 வின் இறுதி நாளான நேற்று பிக் பாஸ் அரங்கில் இருந்த ரசிகர் ஒருவர், அடுத்த சீசனிலும் நீங்கள் தொகுப்பாளராக இருப்பீர்களா என்று கமலிடம் கேட்ட போது, பண்ணனுமா வேண்டாமா என்று அந்த ரசிகரிடம் திருப்பி கேள்வி கேட்டார் கமல். அதற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் பண்ண வேண்டும் என்று கூச்சலிட, உடனே கமல் “பண்ணிட்டா போச்சு” என்று கூறியிருந்தார்.

தற்போது கிடைத்த கூடுதல் தகவல் என்னவெனில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை மையமாக வைத்துத்தான் துவங்கபட்டது. பிக் பிரதர் நிகழ்ச்சியை தயாரித்தது எண்டிமோல் Endemol என்ற நிறுவனம் தான். இந்த நிறுவனம் வீஜய் டிவியுடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்தது.

Bigg-bos-kamal

தற்போது ஒப்பந்தம் முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வங்கியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் மேடையாகவும் பயன்படுத்தி வரும் கமல், அடுத்த சீசனையும் தொகுத்து வழங்கினாலும் ஆச்சர்யமில்லை.