அட, பிக் பாஸ் சம்யுக்த இந்த விஜய் டிவி தொகுப்பாளினியின் நெருங்கிய தோழி தான். இவங்க சிபாரிசா இருக்குமோ.

0
3419
samyuktha
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.

-விளம்பரம்-

நேற்று பிக் பாஸில் இவரை பற்றி இவர் சொன்னது. நான் படிச்சது இன்ஜினியரிங். கார்ப்பரேட்டில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மாடலிங் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருக்கும். அது போல தான் மிஸ் சென்னை டைட்டில் ஜெயித்தேன். அதனால் மாடலிங், நடனம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. என் மகனுக்கு 4 வயது ஆகிறது. அவன் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன்.

- Advertisement -

மேலும் இரண்டு பிஸ்னஸ் நடத்தி வருகிறேன். சோசியல் மீடியா influencer ஆக இருக்கிறேன். நான் ஒரு ஃபிட் மாம். என்னை போன்று இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன். பிக் பாஸ் வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்று பிக் பாஸ் நிங்கள்சயில் நேற்று கூறியிருந்தார். ஆனால், இவர் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் தோழி என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

இவர் பாவனவுடன் இணைந்து பல நடன வீடியோகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார். மேலும், பாவனா கூட இவ்ருடன் பல வீடீயோக்களை தனது இஸ்னாட்க்ராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதே போல சம்யுக்தா பிக் பாஸ் போன பின்னர் பாவனா தனது ட்விட்டர் பக்கத்தில் சம்யுக்தாவின் சில பிக் பாஸ் பதிவுகளை லைக் செய்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement