பிக் பாஸில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் – பெட்டி படுக்கை எல்லாம் பேக் செஞ்சிட்டாராம்.

0
1512
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த இரண்டு வாரங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லைஅதிலும் ஒருசில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை. இத்தனை எபிசோடுகளில் சுரேஷ் சக்கரவர்த்தி அனிதாவின் பிரச்சினை சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் பிரச்சினை என்று இந்த இரண்டு பிரச்சினையை தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லை. அதையும் கடந்த வாரம் கமல் பஞ்சாயத்து செய்து முடித்துவிட்டார். அதே போல எவிக்ஷன் ப்ரீ டாஸ்கின் போது சுரேஷின் தந்திரமான ஆட்டம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.

-விளம்பரம்-

கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் எதுவும் இல்லை. அதே போல கடந்த வாரம் கமல் வந்தும் கூட ஸ்வராசியமாக எதுவும் நடக்கவில்லை. ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் கண்டிப்பாக இந்த இரண்டு நாள் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்றைய நடைபெறும் நிகழ்ச்சியின் நடிகர் கமல் ரியோவிடம் குரூபிஸ்லாம் பற்றி பேசி இருந்தார். அதேபோல வேல்முருகனிடம் சுரேஷ் சக்ரவர்தியன் வேஷ்டி பஞ்சாயத்து குறித்து பேசிஇருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல், போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் முகமூடி அணிந்து இருக்கும் நபருக்கு மாஸ்க்கும் வெளிப்படையாக இருக்கும் நபருக்கு பேட்ச்சும் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் அதிக மாஸ்க்கை பெற்ற ரியோ தனக்கு இந்த மாஸ்க் கொடுக்கப்பட்டது நியாயம் இல்லை என்று மனம் வருந்தி காம கமலிடன் கூறியுள்ளார்.

எலிமினேஷன் பொருத்தவரை நேற்றைய நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஷிவானி ஆகிய மூவர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு விட்டதாக அறிவித்து இருந்தார். மீதமுள்ள சனம் ஷெட்டி, ரேகா, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகியோரில் யார் வெளியேற இருக்கிறார் என்பது இன்று தெரிந்துவிடும். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ரேகா வெளியேற்ற பட்டதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement