கமலுடன் கிஸ்ஸிங் சீனில் நடிச்ச மத்த நடிகைகளை விட உங்களுக்கு ஒரு பெருமை இருக்கு, என்ன சொல்லுங்க ? ரேகாவை பங்கமாக கலாய்த்த சுரேஷ். Unseen வீடியோ இதோ.

0
5785
rekha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பல ரசிகர்களுக்கு தெரியாத ஒரு நடிகர் என்றால் அது சுரேஷ் சக்கரவர்த்தி தான். ஆரம்பத்தில் இவர் கொஞ்சம் தெளிவாக தெரிந்தாலும் தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் செய்துவரும் சேட்டைக்கு அளவே இல்லை. இப்படி ஒரு நிலையில் நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen காட்சி ஒன்றில் நடிகை ரேகாவை பங்கமாக கலாய்த்து உள்ளார் சுரேஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேகா தமிழில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி கமல் சத்யராஜ் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்திருக்கிறார் ரேகா ஆனால் இவருக்கு மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது புன்னகை மன்னன் திரைப்படம் தான் அதுவும் இந்த திரைப்படத்தில் கமல் மற்றும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்வது போல இடம்பெறும் காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது அதுவும் இந்த காட்சியின் போது கமல் அதற்கு முத்தம் கொடுத்து காட்சி அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதையும் பாருங்க : தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் – கொந்தளித்த சின்மயி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த காட்சியை நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பங்கமாக கலாய்த்திருக்கிறார் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ட் சீன் வீடியோ ஒன்றில் நடிகை சினேகாவிடம் சுரேஷ் சக்ரவர்த்தி பேசிக் கொண்டிருந்தார் அப்போது கமல் சாருடன் கிஸ்ஸிங் காட்சிகளில் நடித்த நடிகைகளில் உங்களுக்குத்தான் ஒரு பெருமை இருக்கிறது அதை என்னவென்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்கிறார் அதற்கு ரேகா தெரியாது என்று சொன்னவுடன் கிஸ் செய்தவுடன் தற்கொலை செய்து கொண்ட ஒரே நடிகை நீங்கள்தான் என்று பங்கமாக கலாய்த்திருக்கிறார் சுரேஷ்.

https://www.youtube.com/watch?v=aHu_XP3-n40

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்பான காட்சிகள் ஹாட்ஸ்டார் இல் Unseen வீடியோ என்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை ஹாட்ஸ்டாரில் அவ்வளவாக Unseen வீடியோக்கள் வெளியாகவில்லை அதற்கு மாறாக விஜய் தொலைக்காட்சி சமீபத்தில துவங்கிய விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் Unseen வீடியோக்களை மியூசிக் சேனலில் மட்டுமே வருகிறது . பெரும்பாலும் டிவியில் ஒளிபரப்பப்படும் காட்சிகளை விட இந்த Unseen வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement