தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் – கொந்தளித்த சின்மயி.

0
2056
chinmayi
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கை தொடர்ந்தது. ஆனால், அதற்கு அடுத்து வந்த ஆட்டங்களில் தோல்வி அடைந்து கொண்டு வரும் சென்னை அணி தற்போது 6 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை அணியை வழிநடத்தி வரும் தோனியை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த புதன்கிழமை நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரசிகர் ஒருவர் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தால் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை சென்னை கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 157 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் வாட்சன் அதிகபட்சமாக 50 ரன்களை குவித்து இருந்தார். ஆனால் சென்னை அணியின் கேப்டனான தோனி 12 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். சென்னை அணியின் இந்த தோல்விக்கு கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில் ஒரு சிலர் தோனியின் ஆட்டம் தான் காரணம் என்று தோனியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் தோனியின் ஐந்து வயது மகள் ஜீவாவிற்கு மிரட்டல் விடுக்கும் தோணியில் கமெண்ட் செய்து இருக்கிறார். அந்த கமெண்டில் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ ரசிகர்கள் பலரும் கொந்தளிக்கிறார்கள். மேலும் இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது ‘ஒரு கிரிக்கெட் வீரரின் 5 வயது மகளுக்கு கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் வருவதை, நாம் என்ன ஆனோம் என்பதைக் காட்டுகிறது. அல்லது நாங்கள் எப்போதும் இவர்களை போலவா? சமூக ஊடகங்கள் இப்போது இந்த மக்களை அம்பலப்படுத்துகின்றனவா? சைபர் குற்றத்தை அரசாங்கமும் காவல்துறையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், நாம் அனைவரும் பாதுகாப்பற்றவர்கள். ஆனால், இதற்கு அரசு எங்கே நேரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement