பிக் பாஸ்க்கு கூப்பிட்டா போவேன் – ஓப்பனாக கூறிய இளம் நடிகர். ஷிவானியால் ஆச வந்திருக்கோம் போல.

0
4015
shivani
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. தெலுங்கில் ஏற்கனவே ப்ரோமோ வெளியான நிலையில் சமீபத்தில் தான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியானது. மேலும், தெலுங்கு பிக் பாஸ் வரும் செப்டம்பர் 6 ஆம் துவங்கும் என்றும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், தமிழில் இன்னும் எப்போது துவங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

அதுபோக கடந்த சில தினங்களாக இவர்கள் கலந்து கொள்வார்களா அவர்கள் கலந்து கொள்வார்களா என்று பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக இருக்கும் சில பிரபலங்களின் பெயர்களும் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டது.இந்த சீசனில் அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

ஆனால், இந்த தகவலை மூன்று பேருமே மறுத்தனர். இப்படி ஒரு நிலையில் காக்கா முட்டை படத்தில் பெரிய காக்க முட்டையாக வந்த விக்னேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வகமாக இருந்து வருகிறார். இவரது இந்த ஆர்வத்திற்கு காரணம், ஷிவானி தான் என்கின்றனர் ஒரு தரப்பினர். காரணம் சமீபத்தில் விக்னேஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது உங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் என்று கேட்டதற்கு ஷிவானி என்று பதில் அளித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தால் செல்வீர்களா என்று கேள்வி கேட்டதற்கு கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, நடிகை ஷிவானி, பிக் பாஸ் பாஸ் 4 ல் கலந்துகொள்ள போவதாக ஒரு நம்பகரமான தகவல் வைரலாகி வருகிறது. எனவே, காக்கா முட்டை, ஷிவானியால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூது விடுகிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement