பிக் பாஸ் 4-ல் வேறு ஒரு டிவியின் தொகுப்பாளினி – இவங்க வந்தா ஒரே கலகலப்பா தான் இருக்கும்.

0
930
- Advertisement -

இந்நேரத்திற்கு பிக் பாஸ் ஒரு பாதி நாட்களை கடந்த்து இருக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிக்கொண்டு வந்தது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்த நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது. இதுவரை இரண்டு ப்ரோமோவும் வெளியானது.

-விளம்பரம்-
Archana

இந்த வாரம் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சமீபத்தில் கூட ஷிவானி பிக் பாஸில் கலந்து கொள்வது உறுதி என்று தகவல் வெளியான நிலையில் ரியோ ராஜ், கிரண், ரம்யா பாண்டியன், வேல் முருகன் போன்ற பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெண் தொகுப்பாளினிகள் அரிதாக இருந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. 90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா.

அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள் இளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. அர்ச்சனா மட்டும் பிக் பாஸிற்கு வந்தால் கண்டிப்பாக கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. சமீபத்தில் தான் அர்ச்சனா டாக்டர் படத்தின் தனது டப்பிங் கூட முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement