விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களிலேயே டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்து விடும். அதோடு வின்னர் பற்றி யூகிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் திறமையாக விளையாடி வருகிறார்கள். மேலும், பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் அக்ஷரா மற்றும் வருண் இருவருமே நல்ல நண்பர்களாக, நல்ல புரிதலுடன் விளையாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனாலே இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் திரண்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு கடுமையான டாஸ்க்காக இருந்தாலும் அதை எதிர்கொண்டு விளையாடினார்கள் அக்ஷரா-வருண்.
மேலும், சில வாரங்களுக்கு முன்பு தான் அக்ஷரா மற்றும் வருண் வெளியேறினார்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத முதல் முறையாக டபிள் எவிக்ஷன் நடந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இது ஒரு பக்கமிருக்க, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த முறை ரொமான்ஸ் காட்சிகளுக்கும், முத்தத்திற்கும் பஞ்சம் இல்லை என்று வீடியோக்களும் மீம்ஸ்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.
அக்ஷ்ரா, வருணுக்கு கொடுத்த முத்தம்:
அபிநய்-பாவனி, பாவனி-அமீர், அக்ஷ்ரா-வருண் கொடுத்த முத்தம் என்று பல மீம்ஸ்களும், புகைப்படமும் சோசியல் மீடியாவை வெளியாகி இருந்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் அக்ஷரா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, அபிநய்-பாவனி விஷயம் ஒரு சாதாரண சின்ன விஷயம். அது அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக்கலாம். இவ்வளவு தூரம் கொண்டு வரவே தேவையில்லை. வெளியில் இந்த விஷயம் நடந்து இருந்தால் இதெல்லாம் ஒரு விஷயமா? என்று கேட்பார்கள்.
விளக்கம் கொடுத்த அக்ஷ்ரா:
அந்த அளவிற்கு ஒரு சின்ன விஷயம். அதை ஏன் அவர்கள் இவ்வளவு பெருசாகினார்கள்? என்று தெரியவில்லை. அதேபோல் நான் வருணுக்கு முத்தம் கொடுத்தேன் என்று சொல்வதெல்லாம் தவறு. உண்மையில் என்ன நடந்தது என்றால், நான் குழுவுருக்காக சொட்டர், தலையில் குல்லா எல்லாம் போட்டு இருந்தேன். அவர்கிட்ட போய் காதில் குட் நைட் என்று சொன்னேன். அதை தான் அவர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு முத்தம் கொடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள். டாஸ்கில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். நானும் அவனும் தான் விழித்திருந்தோம். அப்போது வருண்- நான் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன்.
எதுவும் நடக்கவில்லை, சுத்தி கேமரா:
ஆனால், என்னால் முடியவில்லை. அதற்கு தான் கிட்டே போய் நான் ‘குட் நைட்’ என்று சொல்லி இருந்தேன். அதை தான் அவர்கள் ரொமான்ஸ் பாடல் எல்லாம் போட்டு விட்டு பிக் பாஸ் வீட்டில் முத்த காட்சி என்று மீம்ஸ் போட்டு இருந்தார்கள். அந்த மாதிரி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. ஏன் என்றால், எங்களை சுற்றி கேமராக்கள் இருப்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். பாத்ரூம், உடை மாற்றும் அறையை தவிர மீதி எல்லா அறைகளிலும் கேமரா இருக்கு. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி இப்படி எல்லாம் பண்ணுவோம் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் 21 : 21 நிமிடத்தில் பார்க்கவும்
அக்ஷ்ரா-வருண் புது பட வாய்ப்பு:
பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலருக்கும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே பட வாய்ப்பு பெற்றவர் அக்ஷரா மற்றும் வருண். இவர்கள் இருவரும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதுவும் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் ஜோடியாக நடிப்பதகாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.