டி-ஷர்ட்டை தூக்கி சிக்ஸ் பேக்கை காட்டிய பிக் பாஸின் அமலா (அக்ஷரா). வைரலாகும் புகைப்படம்.

0
12095
akshara
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. பிக் பாஸ் சீசன் 1 இல் இருந்து இப்போது வரை இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதனாலேயே இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே வீட்டில் புகைய தொடங்கியுள்ளது. ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் லைக் மட்டும் டிஸ்லைக் கேம் கொடுக்கப்பட்டது. இந்த கேமில் வருண், சின்ன பொண்ணு, இசை ஆகியோருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அக்ஷராவுக்கு அதிகப்படியாக டிஸ்லைக்குகள் பெற்றார். பிரியங்கா அதிக லைக்குகள் பெற்றார். தனக்கு அதிக டிஸ்லைக்குகள் கிடைத்ததை நினைத்து அக்ஷரா கண்ணீர் விட்டதை அனைவரும் பார்த்திருப்போம்.

இதையும் பாருங்க : உன்கூட அவங்கள கம்பேர் பண்ணாதா – AR மனைவியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படத்திற்கு வந்த கமன்ட்.

- Advertisement -

பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்ஷரா தான். அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு. இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அக்ஷரா டிஸ்லைக் வாங்கிவிட்டார் என்று ரசிகர்கள் டிஸ்லைக் கொடுத்தவரைகளை அன்லைக் பண்ணி வருகிறார்கள்.

மேலும், அக்ஷராவை குறித்து சோஷியல் மீடியாவில் தேடும்போது இவர் அதிகமாக பிட்னஸ் பிரிக் விஷயத்தில் கவனம் செலுத்துகிறார் என்பது தெரிய வந்து உள்ளது. அதோடு இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக தன்னுடைய தட்டையான வயிற்றை காட்டும் வீடியோக்களையும் புகைப்படத்தையும் அடிக்கடி போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்டொமக்க பாத்தியாடா.. ப்ச்ச்.. குத்துடா.. என்று நாய் சேகர் வடிவேலு சொல்வது போல மீம்ஸ்ஸை தெறிக்க விடுகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement