உன்கூட அவங்கள கம்பேர் பண்ணாதா – AR மனைவியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படத்திற்கு வந்த கமன்ட்.

0
2011
Vanitha
- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மேலும், சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் வனிதாவை பற்றிய செய்திகள் தான் அதிகம் வருகின்றன.

அதுவும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்தே இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்து வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. மேலும், இவர் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

அதோடு இவர் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி தனுக்கு உதவி செய்ததாக வனிதா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அப்படி என்ன உதவி செய்தார் என்று வாங்க பார்க்கலாம். துபாய்க்கு நடிகை வனிதா சென்றிருக்கிறார்.

எதேச்சையாக அங்கு ஏ ஆர் ரகுமானின் மனைவி சைரா பானுவை பார்த்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் நன்றாக பேசியதாகவும், என்ன Perfume வாங்கலாம் என்று ஆர் ரகுமானின் மனைவி சைரா பானு தனக்கு உதவி செய்ததாகவும், அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement