பாவனி ஏன் அமீரை கண்டிக்கவில்லை. கேள்வி எழுப்புவர்களுக்கு இந்த குறும்படத்தை பார்த்தால் புரியும்.

0
528
Amir Pavni
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் .

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது . இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல்.

- Advertisement -

பாவனி அமீர் புதிய சர்ச்சை :

இவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு குறித்து கிசுகிசுகிளம்புவதற்கு முதல் காரணமே இவர்கள் இருவரும் தான். இருப்பினும் அபிநய் தான் தன்னிடம் பின்னாலே வந்து பேசுகிறார். அவருக்கு என் மீது ஒரு பீலிங்ஸ் இருப்பது உண்மை தான் ஆனாலும், அவரிடம் என்னிடம் பேச வேண்டாம் என்று என்னால் நேரடியாக சொல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார் பாவனி. கடந்த சில நாட்களாகவே பாவனி மற்றும் அபிநய் இருவரும் பேசுவது இல்லை.

அமீர் கொடுத்த திடீர் முத்தம் :

தற்போது அபிநய்யின் பொறுப்பை அமீர் ஏற்று இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே பாவனியிடம் பயங்கரமாக வழிந்து வருகிறார் அமீர். பவானியின் அழகை ரசிப்பது, சைட் அடிப்பது, தனக்கு பாவனி போல தான் ஒரு பெண் வேண்டும் என்று ரொமான்ஸ்ஸை அள்ளி வீசி வருகிறார் அமீர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகச்சியில் பாவனியிடம் காதில் எதோ சொல்வது போல முத்தம் கொடுத்துவிட்டார் அமீர்.

-விளம்பரம்-

பாவனி ஏன் எதுவும் சொல்லவில்லை :

இந்த விவகாரத்தில் அமீரை திட்டும் அளவிற்கு பாவனியையும் திட்டி தீர்த்து வருகின்றனர். பாவனி, ஏன் அமீரை கடுமையாக எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அப்போது பாவனி மீதும் தவறு இருக்கிறது என்று கூறி வருகின்றனர். பாவனி, அமீரை தம்பி என்று தான் பல முறை அழைத்து வருகிறார். ஆனாலும், உன்னை நான் அக்காவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமீர் கூறி வருகிறார்.

எல்லை மீறும் அமீர் – கண்டிக்கும் பாவனி :

அதே போல அமீர் செய்வது எல்லாம் பார்க்கும் போது போலித்தனமாக இருந்தாலும் ஒருவேளை இது பிக் பாஸ் கொடுத்த ஸ்க்ரிப்ட்டாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறது. இப்படி ஒரு நிலையில் அமீர், பாவனியிடம் எல்லை மீறுவதையும் அதற்கு பாவனியின் ரியாஷனையும் குறும்படமாக போட்டு பாவனிக்கு ஆதராவாக நெட்டிசன்கள் சில பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement