நீ யாரு என்ன பேச, அவளுக்கு வாய் இருந்தா எனக்கு வாய் இல்லையா – தாமரையை ஒருமையில் பேசிய போட்டியாளர்.

0
460
thamarai
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி முப்பது நாட்கள் ஆகியுள்ளது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலிருந்து போட்டியாளர்களுக்குள் குழாயடி சண்டை ஆரம்பித்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் போட்டியாளர்களில் ஒருவர் நாடக கலைஞர் தாமரைச்செல்வி. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் தாமரைச்செல்வி எல்லோர் மத்தியிலும் நல்ல பெயரை வாங்கி இருந்தார். தாமரைச்செல்வி என்றால் பாவம், அவருக்கு ஒன்றும் தெரியாது, அப்பாவி என்று எல்லோருமே சொல்லும் வகையில் அவருடைய நடவடிக்கை இருந்தது.

-விளம்பரம்-

நாட்கள் செல்லச் செல்ல தாமரை உடைய உண்மையான சுயரூபம் வெளியே வருகிறது என்று சொல்லலாம். கடந்த வாரம் நடந்த பஞ்சபூதம் டாஸ்கில் தாமரைச்செல்விக்கு நாணயம் கிடைத்தது. பின் தாமரைச்செல்வியின் நாணயத்தை சுருதியும், பாவனியும் திட்டம்போட்டு எடுத்தார்கள். இதனால் தாமரைச்செல்விக்கும் ஸ்ருதிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது தாமரைச்செல்வி தேவையில்லாமல் சுருதி பற்றி சில வார்த்தைகளை விட்டார். பிறகு கிராமமா? நகரமா? என்ற டாஸ்க்கின் போது கூட தாமரைச்செல்வி, ஸ்ருதியை குறி வைத்து அவரின் ஆடை குறித்தும் அவருடைய நடவடிக்கை குறித்தும் தேவையில்லாமல் பேசி இருந்தார்.

- Advertisement -

இதனால் வீட்டுக்குள் கலவரம் வெடித்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் அமைதிக்கு பெயர் போன மதுமிதாவை தாமரைச்செல்வி பொங்க வைத்து விட்டார். இந்த வாரம் சினிமா சினிமா என்ற டாஸ்க் நடைபெற உள்ளது. இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் வித விதமான கெட்டப்பில் காஸ்டியூம் போட்டு தயாராகி இருந்தார்கள். அப்போது மதுமிதா அவ என்று தாமரையை கூப்பிட்டு உள்ளார். இதனால் தாமரைச்செல்வி பொங்கி போய் ‘நீ எப்படி என்னை அவ இவ’ என்று சொல்லலாம் என்று மதுவிடம் சண்டை போட்டு உள்ளார். உடனே மதுமிதாவும் அவ என்பது ஒரு கெட்ட வார்த்தை இல்லை. அதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள், பொறுமையாக பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், தாமரைச்செல்வி நான் அப்படிதான் பேசுவேன், கத்தி தான் பேசுவேன், உன்னால் என்ன பண்ண முடியும் என்று மதுமிதாவிடம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். இதை பார்த்து பொங்கி எழுந்த மதுமிதாவும் தாமரை இடம் பயங்கரமாக கோபமாக பேசி உள்ளார். தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படியே தாமரைச்செல்வி செய்து கொண்டிருந்தால் இந்த வாரம் எலிமினேஷன் தான் என்று சோசியல் மீடியாவில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement