பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒரு வாரத்தை கடந்து இரண்டாம் வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக தான் இருந்து வந்தனர். அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை. இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.
முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக அறிவித்தனர்.
கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமிநேஷனில் இந்த வார தலைவர் தாமரை மற்றும் பாவனியை தவிர 15 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்ப்பு நிலவி வருகிறது.
நேற்றய நிகழ்ச்சியில் மீண்டும் கடந்து வந்த டாஸ்க் தொடர்ந்தது. ராஜுவை தவிர மற்ற அனைவருமே இந்த கடந்து வந்த டாஸ்கில் தங்கள் சோக கதைகளை சொல்லி முடித்துவிட்டனர். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டில் காணாமல் போனவர்கள் இரண்டு பேர் யார் என்பதை போட்டியாளர்கள் கூறி வருகின்றனர். அதில் பிரியங்கா அக்ஷராவின் பெயரை கூறியிருக்கிறார். ஏற்கனவே பிரியங்கா அக்ஷரா மீது கொஞ்சம் காண்டில் தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.