இன்று 10 பேர் Safe, வெயிட்டிங் லிஸ்டில் காத்திருக்கும் 5 போட்டியாளர்கள். (அப்போ இவங்கள அனுப்பிடுவாங்க)

0
866
bb
- Advertisement -

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் யார் யார் இன்று காப்ற்றப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் முதல் வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேசன் நடைபெற்றது. இதில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை செல்வியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-103-630x1024.jpg

இதில் தாமரை செல்வி மற்றும் பாவனி தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டனர். இதில் யார் யாரை நாமினேட் செய்தனர் என்பதை பாப்போம்,

- Advertisement -

அக்ஷரா – இசைவாணி, சுருதி
அபிஷேக் – அக்ஷரா நாதியா
அபிநய் – இசைவாணி, ராஜு
பிரியங்கா – அக்ஷரா ஐக்கி
சின்ன பொண்ணு – இசைவாணி, அண்ணாச்சி
வருண் – இசைவாணி, சின்னப்பொண்ணு
இசைவாணி – சின்ன பொண்ணு, அண்ணாச்சி
சிபி – அண்ணாச்சி, இசைவாணி
அண்ணாச்சி – அபிநய், சிபி
மதுமிதா – இசைவாணி, நிரூப்
சுருதி – அக்ஷரா, நிரூப்
நிரூப் – அபிநய், வருண்
ஐக்கி – அபிஷேக், நிரூப்
ராஜு – அபிநய், பிரியங்கா
நாதியா – நிரூப், அண்ணாச்சி
பாவனி – நிரூப், சிபி
தாமரை – சின்னப்பொண்ணு, மதுமிதா

என்று மொத்தம் 15 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக இசைவாணியை 6 பேர் நாமினேட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 பேர் எலிமினேஷனில் இருந்து காப்ற்றப்பட்டு இருக்கின்றனர். இதில் அபிஷேக், மதுமிதா, நாதியா, சின்ன பொண்ணு வருண் ஆகிய 5 பேரின் முடிவு அறிவிக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இந்த 5 பேரில் இருந்து யார் வெளியேற போகிறார் என்று நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை முதல் வாரத்தில் கண்டிப்பாக வயதானவர்களை தான் வெளியேற்றுவார்கள். இது கடந்த நான்கு சீசன்களாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை கண்டிப்பாக சின்ன பொண்ணுதான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக வெளியேற வாய்ப்பு இருப்பவர் நாதியா மற்றும் அபிஷேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement