விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்களை கடந்து உள்ளது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் மட்டும் தான் வீட்டுக்குள் பாசமழை, கொஞ்சல் என எல்லாம் இருந்தது. பின் கடந்த 2 வாரமாகவே பிக்பாஸ் வீட்டில் கலவரம் வெடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் நாணயம் தொடர்பாக தாமரைச்செல்விக்கு இருந்த பிரச்சனை முற்றி உள்ளது. அதில் நேற்று ஸ்ருதிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையிலான பிரச்சனை பயங்கரமாக முற்றியது. நேற்றைய எபிசோடில் தாமரை குளித்து முடித்து விட்டு உடை மாற்றும் போது பவானியும் சுருதியும் அதை பயன்படுத்தி தாமரை உடைய நாணயத்தை எடுத்துள்ளார்கள்.
இதனால் தாமரை பயங்கரமாக கோபம் அடைந்து இது மிகப்பெரிய கேவலமான செயல், நம்பிக்கை துரோகம், நான் நம்பி தானே வைத்தேன். நான் உடை மாற்றும்போது துண்டை மறைத்து என்னை ஏமாற்றி நாணயத்தை எடுப்பது மிகப்பெரிய துரோகம் என்று அழுது புலம்பி தள்ளினார். வீட்டில் உள்ள பலரும் தாமரைக்கு சப்போர்ட் செய்தார்கள். அதே சமயத்தில் பவானி நான் ஸ்ருதிக்கு நாணயம் எடுக்க உதவி செய்யவில்லை. தாமரை பாதி உடையில் இருந்தார்.
அதனால் நான் துண்டை எடுத்து மறைத்தேன். அதை தவிர நான் ஸ்ருதிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பவானி கூறினார். இந்த விவகாரம் குறித்து ராஜு, பாவனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ட்ரஸ் மாத்தும் போது எப்படி எடுப்பீர்கள். நான் இப்போ உங்களிடம் இருந்து காயினை எடுக்க வேண்டும், நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா என்று கேட்க, அதற்கு பவானி, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் பேசாதீங்க, நான் லேடிஸ் கிட்ட தான் இப்படி பண்ணியிருக்கேன் என்று கேட்க அதற்கு ராஜுவே ‘இங்க லேடிஸ் ஜென்ட்ஸ் எல்லாம் கிடையாது.
இங்க எல்லாருக்கும் ஒரு பர்சனல் ஸ்பேஸ் தான்’ என்று கூறினார். பாவனியிடம் ராஜு பேசிய ‘நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா’ என்ற அந்த வார்த்தை மிகவும் தவறானது என்று சமூக வலைதளத்தில் பலரும் கமன்ட் போட்டு வருகின்றனர். என்னதான் ராஜு, பேசுவது நியாயம் தான் என்றாலும் ஒரு பெண்ணிடம் ராஜு இப்படி பேசியது தவறு என்று குற்றம்சாட்டி வருகின்றனர். அதில் ஒரு சிலர் போட்ட கமெண்டில் ‘ஒரு பெண்ணிடம் இப்படியா கேட்பது, உங்க மேல இருந்த மரியாதயே போயிடுச்சி’ என்று கமன்ட் செய்துள்ளார்கள்.
இதுவரை ராஜுவை கமல்ஹாசன் உட்பட சக போட்டியாளர்கள் ரசிகர்கள் என்று அனைவரும் பாராட்டி வரும் நிலையில் திடீரென அவருக்கு எதிராக இந்த விவகாரம் திரும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பாவனி மற்றும் ஸ்ருதிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ராஜூபாய் என்றும் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.