சண்டையும் இல்ல, ரெட் கார்டும் இல்ல – நமீதா வெளியேறிய காரணம் இதானாம். மற்ற போட்டியாளர்களுக்கு சிக்கலாச்சே.

0
21846
namitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சனிக்கிழமை, சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். மேலும், நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததாக கூறப்பட்டது. அவரை பிக் பாஸ் குழு எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனும் அளிக்காததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூட கூறப்பட்டது .

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் நமீதாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிக் பாஸ் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களையும் தனிமைப்படுத்த தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனால் நிகழ்ச்சி தொடருமா ? ஒரு வேலை மற்ற போட்டியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருந்தால் என்ன நிலை ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பிக் பாஸில் கலந்துகொள்ளும் முன்னரே போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு நிலையில் நமீதாவிற்கு தொற்று ஏற்பட்டு இருக்கும் செய்தி உண்மையாகும் பட்சத்தில் அவர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement